ரசமணிகளுக்கு சத்தூட்டவும் ,அவற்றை சாரணை செய்யவும், இந்த 120 உபரசங்கள் ஆதியானவை .உபரசங்களின் வேதை வெகு லகுவானது. இதை முன்னே பார்த்தால் (உபரசங்களில் செய்தால் )வெகு சுருக்கில் வேதை காணலாம்.
செவ்வாய், 27 நவம்பர், 2018
6.காந்தம்.(உபரசங்கள் 120.)
காந்தம் நான்கு வகைப்படும்:
காந்தச் சத்தால் தேக சித்தி சீக்கிரத்திலாகும்.
- அரக்கு காந்தம். (அவுல் அரக்குநிறம் ),
- ஊசிக்காந்தம். (ஏழு ஊசி ஒன்றின் கீழ் ஒன்றாக பிடிக்கும் ),
- உருளை காந்தம்.(உருண்டை வடிவாக இருக்கும் ),
- கற்காந்தம்.(பயிர் காந்தம் ).
வேறுபெயர்கள் :
- காயசித்திக்கு பாத்திரவான் ,(காந்த கிண்ணி )
- சிவலோக சேவகன்,
- பராபரம் ,
- அயசிலிட ஈயமானோன்,
- லோகசீவன் ,
- தரணி நாதன் ,
- சூதாங்குசம் ,
- நாதாந்தம் ,
- நவலோகதுரட்டி.
2.நிமிளை.(உபரசங்கள் 120.)
நிமிளை இவை நான்கு வகைப்படும்:
1.பொன் நிமிளை ,(தங்க நிமிளை அல்லது வெண்கல நிமிளை ),

2.வெள்ளி நிமிளை (ரசித நிமிளை அல்லது வெண் நிமிளை ),
3.லோக நிமிளை (அய நிமிளை ),
1.பொன் நிமிளை ,(தங்க நிமிளை அல்லது வெண்கல நிமிளை ),
- மறைப் பெயர்கள் :
- பொன்பிறந்த கருவில் உருவானோன்.
- சத்திநாதம் ,
- மாட்சிகம் ,
- கன்னியுட மாதநீர்,
- பொன்னிற முதிர்ந்தோன்,
- வெகுகாமி ,
- பொன்னுசத்தி ,
- சத்தியுடைய நாமம்,
"பொன்னிமிளை சத்தால் சுவர்ணம் சுண்ணகுருவாகும் "

2.வெள்ளி நிமிளை (ரசித நிமிளை அல்லது வெண் நிமிளை ),
- மறைப்பெயர்கள் :
- செலகெந்தி,
- தங்கத்தைநீற்றும் ,
- சத்துக்களை உருக்கும் ,
- சரக்குகளை சுண்ணம்செய்யும் ,
- லோகத்தை உடைக்கும் ,
- ரசத்தைக்கட்ட உதவியாக இருக்கும்.
- இதன் வேறு பெயர்கள் :
- சடச்சி ,
- சத்திவெள்ளச்சி ,
- நாதாந்தி ,
- சுக்கிரன் ,
- தூய்மையாளன்,
- சிற்பரி ,
- கறுப்பி ,
- துரைச்சி ,
- சனி ,
- மாருதி .
3.லோக நிமிளை (அய நிமிளை ),
செவ்வாய், 16 ஜனவரி, 2018
1.துருசு.(உபரசங்கள் 120.)
1.துருசு.(உபரசங்கள் 120.)
- கல்லுப்பு ,எலுமிச்சம்பழச்சாறு ,தயிர் ,ஆகிய மூன்றும் செம்பு பாத்திரத்தில் சேர்த்துவைத்து மூடி ஒரு மண்டலம் புதைத்து பின் எடுப்பதாகும்.வைப்பு துருசு பச்சையாக இருக்கும்.சரியாக செய்த துருசு பொடித்து மண் ஓட்டில் பரப்பி நெருப்பில் இட்டு எரிக்க வெள்ளையாகும்.காற்றில் பட பச்சையாகவும் ,தண்ணீர் பட்டால் நீலநிறமாகவும் மாறவேண்டும்.தற்காலத்தில் வைப்பு துருசு ஓட்டிலிட்டு எரிக்க கருப்பாக உள்ளது. ஆராயவேண்டிய மருந்து.
இதன் வேறு பெயர்கள் :
- நீலன் ,
- சுடலையோன் ,
- நிஷ்களன்,
- ஆடும்கூத்தன் ,
- ஆதிகுருநாதன்,
- மந்தார கெங்கையோன்,
- கருமேகன் ,
- கடுங்கூத்தான் ,
- குன்றைவில்லி ,
- சூதச்சத்துரு,
- நிறமூத்தன் ,
- கங்களான் ,
- நல்பச்சை,
- மால்மச்சினன் ,
- பரசுபாணி ,
- பல்லுக்கேத்தன்,
- காசாம்பு ,
- வர்ணத்தோன் ,
- குலையோன் ,
- கண்டர் ,
- கண்ணுக்கு ராசன் ,
- துத்தம் ,
- மயில் துத்தம்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






















