அஸ்திபேதி:
வேறு பெயர்கள் :
- ஆகத்தை உருக்கி நீராக்கி ,
- எலும்புருக்கி ,
- எலும்பை நீராக்கி ,
- நாகத்தை சொர்ணனமாக்கி ,
- பாஷாணத்தை பவளமாக்கி ,
- வச்சிரத்தை தோயமாக்கி ,
- காயத்தை உருக்கி ,
"அஸ்திபேதி சத்தால் நவரத்தினங்கள் தண்ணீராகும் "
அன்னபேதி:
வேறு பெயர்கள் :
- கல்நாதம் ,
- அன்னகாலன் ,
- கல்சரடுநாதம் ,
- களிம்பு ,
- கல்வேகம் ,
- மலை வீரியம்,
- கடுங்காரபேதி,
- மலைருது.
"அன்னபேதி சத்தால் லிங்கம் மெழுகாகும் "
சாத்திரபேதி:
வேறு பெயர்கள் :
- சலத்தோடு ,
- மலைநாதம் ,
- மலைக்கரு ,
- சிலைக்கெந்தி ,
- இமயமலைக் குறிப்பு ,
- கல்லுயிர் ,
- கனல்வேதி ,
- செஞ்சிலை ,
- பொதியமலை விந்து .
"சாத்திரபேதிசத்தால் சுவர்ணம் கட்டும்"
கல்மதம்: (மலைகளிலிருந்து வழியும் மலைநஞ்சு )
வேறு பெயர்கள்
- கல்தீட்டு ,
- மலைத்துடக்கு ,
- மலைத் தூமை ,
- சிலைக்குள் தீட்டு ,
- மலைநஞ்சு ,
- சிலையினுட சுரோணிதம் ,
- கல்லுக்குள் சோரம் ,
- கல்காமி ,
- கல் நாதம் ,
- மலையின் மதம் ,
- மலை ரத்தம் ,
- சிலை ஒழுக்கு ,
- செந்நீர் .
"கல்மதசத்தால் சரக்கெல்லாம் கட்டும்".