1.துருசு.(உபரசங்கள் 120.)
- கல்லுப்பு ,எலுமிச்சம்பழச்சாறு ,தயிர் ,ஆகிய மூன்றும் செம்பு பாத்திரத்தில் சேர்த்துவைத்து மூடி ஒரு மண்டலம் புதைத்து பின் எடுப்பதாகும்.வைப்பு துருசு பச்சையாக இருக்கும்.சரியாக செய்த துருசு பொடித்து மண் ஓட்டில் பரப்பி நெருப்பில் இட்டு எரிக்க வெள்ளையாகும்.காற்றில் பட பச்சையாகவும் ,தண்ணீர் பட்டால் நீலநிறமாகவும் மாறவேண்டும்.தற்காலத்தில் வைப்பு துருசு ஓட்டிலிட்டு எரிக்க கருப்பாக உள்ளது. ஆராயவேண்டிய மருந்து.
இதன் வேறு பெயர்கள் :
- நீலன் ,
- சுடலையோன் ,
- நிஷ்களன்,
- ஆடும்கூத்தன் ,
- ஆதிகுருநாதன்,
- மந்தார கெங்கையோன்,
- கருமேகன் ,
- கடுங்கூத்தான் ,
- குன்றைவில்லி ,
- சூதச்சத்துரு,
- நிறமூத்தன் ,
- கங்களான் ,
- நல்பச்சை,
- மால்மச்சினன் ,
- பரசுபாணி ,
- பல்லுக்கேத்தன்,
- காசாம்பு ,
- வர்ணத்தோன் ,
- குலையோன் ,
- கண்டர் ,
- கண்ணுக்கு ராசன் ,
- துத்தம் ,
- மயில் துத்தம்.